திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடியோ: நள்ளிரவில் நயன்தாரா செய்த கலாட்டா.!! இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய நண்பர்கள்.!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இவர் இதனைத் தொடர்ந்து சந்திரமுகி கஜினி கள்வனின் காதலி உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
இவரது நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்தி உருவான அறம், இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களின் வெற்றி தமிழ் சினிமாவில் இவரை லேடி சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயனுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. நயன்தாரா குடும்ப வாழ்க்கை மட்டுமல்லாது சினிமாவிலும் பிஸியாக இயங்கி வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தற்போது மண்ணாங்கட்டி என்ற தமிழ் படத்திலும் ஹிந்தி படம் ஒன்றிலும் கமிட் ஆகி இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
— Nayanthara✨ (@NayantharaU) April 4, 2024
இந்நிலையில் தனது நண்பர்களுடன் நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பிரபலமான நகை கடைக்கு முன்பு நள்ளிரவில் நயன்தாராவின் நண்பர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நயன்தாரா அவர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த வீடியோவை அவர் தனது X சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.