திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பட வாய்ப்பு இல்லாததால் புதிய தொழிலில் களமிறங்கிய நயன்தாரா.. இப்போ என்ன பண்ணார் தெரியுமா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நயன்தாரா. மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
இது போன்ற நிலையில், 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய்முறை மூலம் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயனார். இது இணையத்தில் மிகப்பெரும் பேசுபொருளானது.
திருமணத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து பாராட்டு பெற்றார் இதன் பின்பு தற்போது ஒரு சில பிஸ்னஸ்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நயன்தாரா. முதலில் பெண்களுக்கான மேக்கப் பிராடக்டுகளை விற்கும் தொழிலை கையிலெடுத்தார். தற்போது பெண்களுக்கான நாப்கின் விற்கும் தொழிலை கையில் எடுத்துள்ளார். படவாய்ப்பு குறைந்ததால் தான் நயன்தாரா பிஸினஸில் இறங்கி விட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.