நடிகர் ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் ஐரா நயன்தாரா! வைரலாகும் வீடியோ!



nayanthara-video


நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் நயன்தாரா பற்றி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நயன்தாரா நல்ல நடிகை. அவரை பற்றி வராத செய்தியே இல்லை.  தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வெச்சுப்பாங்க. அப்புறம் விட்ருவாங்க. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறாங்க, சீதாவாகவும் நடிக்கிறாங்க. என்று நயன்தாராவை தாக்கி இரட்டை அர்த்தமுடைய கருத்துக்கள் பலவற்றை தெரிவித்தார்.

இந்தநிலையில் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அவர் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



 

இந்நிலையில் நடிகர் ராதாரவி பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் தற்போது ஐரா படத்தின் காட்சி வெளிவந்துள்ளது. "உங்களை போன்ற சிலரால் தான் பெண்கள் வெளியில் சென்று நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை" என நயன்தாரா அதில் பேசியுள்ளார். மேலும், அந்த கட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.