மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாடா..ஒருவழியா ஹனிமூன் கொண்டாட்டம் முடிஞ்சாச்சு! அடுத்த நாளே நயன்தாரா செய்த வேலையை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். சுமார் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அங்கு அவர்கள் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தனர். நயன்தாரா கல்யாணம், ஹனிமூன், அவர் என்ன செய்கிறார் என்பதே பரபரப்பாக இருந்தது.
இந்தநிலையில் ஹனிமூன் முடிந்தது இந்தியா திரும்பிய கையோடு நயன்தாரா மும்பைக்கு சூட்டிங்கிற்கு சென்றதாக தகவல் பரவி வருகிறது. அவர் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளாராம்.