பிறந்தநாள் அன்று மிரட்டும் நயன்தாரா.. பிரமிக்கவைக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசர்.. நீங்க பாத்துட்டீங்களா?



nayantharas-netrikan-movie-teaser-video

நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் படத்தின் டீசர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

அவள் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானடைந்த இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்துவருகிறார் நடிகை நயந்தாரா. இளம் பெண்களை கடத்திச்சென்று சித்ரவதை செய்யும் ஒரு சைக்கோவை கண் தெரியாத நயன்தாரா எப்படி பழிவாங்குகிறார் என்ற கோணத்தில் படத்தின் கதை அமைந்துள்ளது.

nayanthara

இந்நிலையில் நயன்தாரா இன்று தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவின் காதலரும், நெற்றிக்கண் படத்தின் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

பார்ப்பதற்கு மிக மிரட்டலாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ படத்தின் டீசர் வீடியோ.