மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. பொறுப்பான அம்மாவாக நயன்தாரா செய்த காரியம்! ரசிகர்களை கவர்ந்த கியூட் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணமான 4 மாதத்திலேயே வாடகை தாய் மூலம் அவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர். தங்கள் மகன்களுக்கு அவர்கள் உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைத்துள்ளனர். அண்மையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது மகன்களின் முதல் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்து புகைப்படங்களையும் பகிர்ந்தனர். நயன்தாரா தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வாறு அவர் தனது மகன் உயிரை மடியில் படுக்க வைத்து, இதமாக மசாஜ் செய்து தூங்க வைத்துள்ளார். அந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
Chilling Uyir 🫶🏻 💆🏻♂️ #relax pic.twitter.com/y72VL3386Y
— Nayanthara✨ (@NayantharaU) October 19, 2023