மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பகத் பாசிலை இந்த காரணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டேன்" நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்மையை உடைத்து பேசிய நஸ்ரியா.!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் நஸ்ரியா. இவர் தமிழில் முதன் முதலில் 'நேரம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தாலும் நஸ்ரியாவின் நடிப்பு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.
மேலும் நஸ்ரியா தமிழில் நையாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், பெங்களூரு நாட்கள், திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து ரசிகர்களின் மனதில் அழியா இடத்தை பிடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே மலையாள நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பில் இருந்து விலகிக் கொண்டார் நஸ்ரியா. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நஸ்ரியா இவரது திருமணம் குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியது, "நானும் பகத் பாஷிலும் ஒரு திரைப்படத்தில் இணைந்து வேலை செய்தோம். அப்போது அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் எனது காதலை கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார். எனக்கு ஏற்றவர் பகத் பாஸில் தான். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறியிருக்கிறார்.