மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தையின் செயலால் நடுத்தெருவிற்கு வந்த பிரபல சீரியல் நடிகை.!
கடந்த 1992 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நீலிமா ராணி. அதன் பிறகு இவர் வெள்ளி திரையில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், பின்னாலில் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தார். அதோடு திரைப்படங்களிலும், குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வந்தார்.மேலும் இவருக்கு சென்ற வருடம் தான் 2வது குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நடிகை நீலிமா ராணி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில அதிர்ச்சி விஷயங்கள் பற்றி குறிப்பிட்டு பேசியிருந்தார். அதாவது, நீலிமா ராணி சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடித்து மாதம் 1 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்த பணம் அனைத்தையும் தன்னுடைய தந்தையிடம் தான் கொடுத்ததாக கூறியுள்ளார். ஆனால், நீலிமாவின் தந்தை அந்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு, அனைத்து பணத்தையும் இழந்து விட்டதாக சொல்லியிருக்கின்ற நீலிமா ராணி, ஒரு கட்டத்தில் கையில் சுத்தமாக பணம் இல்லாததால், நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் தன் நிலை கண்டு துவண்டு விடாமல், வாடகை வீட்டில் குடியேறி வைராக்கியத்தோடு சம்பாதித்து தான் வாடகைக்கு இருந்த வீட்டையே சொந்தமாக வாங்கியிருக்கிறார் நீலிமா ராணி.