மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானாவில் இடையிலேயே கோபிநாத் செய்த காரியம்! ஏன்னு பார்த்தீங்களா!! கண்கலங்கி நெகிழவைத்த சம்பவம்!!
விஜய் டிவியில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் நீயா நானா. இதில் ஒவ்வொரு வாரமும் மிகவும் வித்தியாசமான தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. பல விவாத நிகழ்ச்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம்
கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள். இந்த சூழ்நிலையில் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் அதிகம் படித்த பெண் ஒருவர், படிக்காத தனது கணவர் குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை எழுத்துக் கூட்டி ஒரு மணி நேரமாக படிப்பதாக நக்கலாக கூறியுள்ளார். அதற்கு அந்த கணவர் மிகவும் அப்பாவித்தனமாக தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகள் எடுத்த மதிப்பெண்களை நீண்ட நேரம் பெருமிதத்தோடு, ஆனந்தத்தோடு பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த நபர் தனக்கு காவியமாக தெரிவதாக கூறிய கோபிநாத் அவரை சிறந்த தந்தையாக கௌரவித்து அவரது மகள் கையாலேயே நிகழ்ச்சியின் இறுதியில் கொடுக்கவேண்டிய பரிசை இடையிலேயே கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி பலரையும் கண்கலங்கி நெகிழ வைத்துள்ளது.