ஜெயிலருக்குப் பிறகு திண்டாடி வரும் நெல்சன்.. என்ன காரணம்.?



Nelson struggle to direct a movie after jailer

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். 2012ம் ஆண்டு "கோலமாவு கோகிலா" படத்தை இயக்கியதில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" படத்தை இயக்கினார்.

Jailer

தொடர்ந்து மிருகம், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் நெல்சன். இந்நிலையில் பீஸ்ட் படம் சரியான வரவேற்பை பெறாததால் துவண்டிருந்த நெல்சனுக்கு ரஜினியை வைத்து ஜெயிலர் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் கூறும் கதைகளெல்லாம் பெரிய நடிகர்கள் நடிக்க கூடிய பெரிய பட்ஜெட் கதைகளாக உள்ளதால், சிறிய நடிகர்கள் யாரும் நடிக்க தயங்குகின்றனர். இதன்படி தனுஷிடம் நெல்சன் சொன்ன கதையின் பட்ஜெட் 400கோடியை தாண்டி வருகிறதாம்.

Jailer

இன்னும் தனுஷ் இவர் படத்தில் நடிக்க ஒத்துக்கொள்ளாத நிலையில், பெரிய பட்ஜெட் படங்களில் ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்தால் தான் சரிவரும் என்று கூறி தயாரிப்பாளர்கள் நெல்சன் படத்தை தயாரிக்க மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.