#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி! வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்#!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக். நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்துள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமூக ரீதியான பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இதில் ஹீரோயினாக கருப்பன் பட நடிகை தன்யா மற்றும் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
#NenjukuNeedhi@ZeeStudios_ @BoneyKapoor @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @RedGiantMovies_ @Arunrajakamaraj @actortanya @Aariarujunan @dineshkrishnanb @dhibuofficial @AntonyLRuben @zeemusicsouth @kalaignartv_off @SureshChandraa @ProRekha @DoneChannel1 @teamaimpr pic.twitter.com/tNbwkiblid
— Udhay (@Udhaystalin) May 6, 2022
இந்தநிலையில் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் தேதி குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே 9ம் தேதி மாலை 6.30 மணிக்கு நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படம் மே 20 ம் தேதி வெளியாகவுள்ளது.