திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Squid Game 2: ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தின் முதல் டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ்; லிங்க் உள்ளே.!
கோடிக்கணக்கில் பணம் சம்மதிக்க ஆசைப்படும் நபர்களின் எண்ணத்தை தனக்கு சாதகமாக்கி நடக்கும் விளையாட்டில், எலிமினேஷன் பெயரில் நடைபெறும் கோர மரணங்கள் குறித்த ஓடிடி தொடர் ஸ்குவிட் கேம் (Squid Game).
இந்த தொடரின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 2021 முதல் நெட்பிளிக்ட்ஸில் கொரியன், ஆங்கிலம் ஆகிய மொழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு காரணமாக, இத்தொடர் உலகளவில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
Introducing the very first look at SQUID GAME SEASON 2. Coming this year. pic.twitter.com/fzRzdtHRDY
— Netflix (@netflix) February 1, 2024
இத்தொடரில் லீ ஜங்-ஜே, பார்க் ஹே-சூ, வீ ஹா-ஜூன், ஹோயியோன் ஜங், ஓ யோங்-சு, ஹியோ சங்-டே, அனுபம் திரிபாதி மற்றும் கிம் ஜூ-ரியோங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில், தொடரின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டில் விரைவில் வெளியாகிறது. இதனை உறுதி செய்யும்பொருட்டு நெட்பிளிக்ஸ் தற்போது தனது முதல் டீசரை பகிர்ந்து இருக்கிறது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.