திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரே பார் சமுத்திரக்கனி..! சமுத்திர கன்னி, சமுத்திர தோனி. நடிகர் சமுத்திரக்கனி பெயரை வைத்து பகிரப்படும் மீம்கள்.!
சில மாதங்களுக்கு முன் நடிகர் வடிவேலுவை வைத்து பிரே பார் நேசமணி என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகர் சமுத்திரக்கனியை வைத்து ஹாஷ்டேக்குள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.
முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலையே முடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வடிவேலுவை வைத்து ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்ததுபோல் தற்போது சமுத்திரக்கனியை வைத்து நெட்டிசன்கள் மீம் தயார் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சமுத்திரக்கனியின் உருவம், அவரது பெயரை வைத்து சமுத்திர கன்னி, சமுத்திர கேணி, சமுத்திர தோனி, சமுத்திர முனி இப்படி பல விதங்களில் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.