திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன இதெல்லாம்.. குழந்தையிடம் இப்படியா நடந்துகொள்வது?? ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ!!
தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் களமிறங்கி குட்பை மற்றும் மிஷன் மஜ்னு போன்ற படங்களில் நடிக்க உள்ளார். ராஷ்மிகா அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது சிறுமி ஒருவர் தனக்கு பசிக்கிறது என கூறி எதாவது தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ராஷ்மிகா அவரை கண்டு கொள்ளாமல் எதுவும் இல்லை என கூறி அங்கிருந்து புறப்படுகிறார்.
மேலும் காரில் ஏறி அமர்ந்த பிறகும் சில குழந்தைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே பின்னாடியே சென்றுள்ளது. ஆனாலும் ராஷ்மிகா அவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே டாட்டா காட்டி விட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ராஷ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.