திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. திட்டி கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சின்ன திரையின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் தற்போது கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் டி இமான், விவாகரத்திற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்று பிரபல யூட்யூப் சேனலில் பேட்டியளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயன் தனது வேலையில் பிஸியாக இருந்து வந்தார். இதனை அடுத்து சமீபத்தில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உணவு, உடையின்றி பாதிப்புக்கு உள்ளனர். மேலும் பல திரை பிரபலங்களும் நிதி உதவி செய்து வந்தனர்.
இது போன்ற நிலையில் சிவகார்த்திகேயனும் முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் அளித்தார். இதனை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இமான் விஷயத்தில் தன் இமேஜ் டேமேஜ் ஆனதை சரி செய்யவே இவர் இவ்வாறு செய்கிறார் என்று கிண்டல் அடித்து பதிவு செய்து வந்தார். இதனை நெட்டிசன்கள் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றாலும் பண்ணுபவர்களை குறை சொல்லாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.