மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அனிமல் படத்தை புகழ்ந்த த்ரிஷாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. இவரது இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் "அனிமல்". இப்படத்தை டி - சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ், சினி 1 ஸ்டுடியோஸின் கீழ் பூஷன் குமார், க்ரிஷன் குமார், முராத் கெதானி, பினராய் ரெட்டி வங்கா தயாரித்துள்ளனர்.
ரன்வீர் கபூர், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் 3 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது. தணிக்கை வாரியத்தில் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையேயான உறவைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது.
படம் வெளியாகிய 2வது நாளிலேயே 236கோடியை வசூலித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஒரே வார்த்தை.. கல்ட்! ப்ப்ப்ப்பா.." என்று கைத்தட்டல் எமோஜிக்களுடன் படத்தை பாராட்டியிருந்தார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், மன்சூர் அலிகான் சர்ச்சையில், பெண்களுக்கு கொஞ்சமும் மரியாதை இல்லை என்று பொங்கிய த்ரிஷா, இப்போ எப்படி பெண்களுக்கு எதிரான படத்தைப் புகழ்ந்து பாராட்டுகிறார்? என்று விமர்சித்து வருகின்றனர்.