மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த செயல்.! மீம்ஸ் போட்டு விஜயை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்..
நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவரது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் விஜய். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு விழா நடத்தி பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடந்து விஜய் இரவுநேர இலவச பாடசாலை, மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு , அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை விஜயின் மக்கள் இயக்கம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்காக, மீட்புப் பணியில் தனது மக்கள் இயக்கத்தில் ஈடுபடச் சொல்லி விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ஈ சி ஆரில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினர்.
அப்போது மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர், உணவு பரிமாறும்போது விஜயின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு நடந்து வந்தார். "இந்த உணவை உங்களுக்கு வழங்குபவர் உங்கள் விஜய்" என்று பலரும் இந்த விஷயத்தை தற்போது சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.