#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த வாரம் ஓடிடி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன தெரியுமா.? முழு விவரம் இதோ!!
தற்போது திரையரங்குகளில் திரைப்படங்களை பார்ப்பதை காட்டிலும் ஓடிடி தளங்களில் திரைப்படம் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் ஒரு சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரம் இதோ.
நடிகர் சதிஷ் நடிப்பில் கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த காதல் தி கோர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஹாய் நான்னா என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் தேஜஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.