மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யோகி பாபு, பிக்பாஸ் யாஷிகா நடிப்பில் ஜாம்பி; பயங்கர திகிலுடன் வைரலாகும் டீசர்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. யாமிருக்க பயமேன் திரைப்படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் யோகிபாபு. அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் காமெடி நடிகராக நடித்துவருகிறார்.
துருவாங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார் யாஷிகா. பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா.
இந்நிலையில் அடல்ட் சம்மந்தமான காமெடி மற்றும் ஹாரர் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் யோகி பாபு. புவன் நுல்லன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாம்பி’. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இதை எஸ் 3 பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ரத்த காட்டேரியிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்ற ரீதியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.