மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில்! ஓடிடியில் 'விடுதலை' படம்... சென்ஸாரில் வெட்டப்பட்ட காட்சிகளுடன்..! சூப்பர் அப்டேட்.!
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக இதில் சூரியின் நடிப்பு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இதில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். கிராமத்து பெண் வேடத்தில் நடித்த அவர் அந்த கதாப்பாத்திரத்தை அற்புதமாகவும் இயல்பாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதியும் பெருமாள் வாத்தியார் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் தமிழ், நடிகர் சேத்தன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படமானது எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் சிறுகதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படமானது ஜீ ஓடிடி தளத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் நீக்கப்பட்ட 20 நிமிட காட்சிகளும் அதனுடன் சேரந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.