மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மனாக மாறிய செய்திவாசிப்பாளர் கண்மணி! அச்சு அசல் அந்த நடிகை மாதிரியே இருக்காங்களே! கலக்கல் வீடியோ!!
சமீப காலமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்காகவே செய்தி பார்த்தவர்களும் ஏராளம். அவ்வாறு முதலில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத்.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவரைத் தொடர்ந்து தற்போது மக்களால் பெருமளவில் ரசிக்கக் கூடியவர் பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி. இவரது உடை, ஹேர் ஸ்டைலுக்கே ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். இவருக்கு ஏராளமான படங்கள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால் அவர் அதில் உடன்பாடு இல்லை என நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கண்மணி அம்மன் போல வேடமமிட்டு அழகிய போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் சிலர் அவர் பார்ப்பதற்கு நடிகை ரம்யா பாண்டியனைப் போலவே இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.