திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸில் பிரபல ஆண் செய்தி வாசிப்பாளர்.. யார் தெரியுமா.?
பிக் பாஸ் சீசன் 7ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 6 சீசங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் எனவும், இந்த முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் பங்கிற்கும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முந்தைய சீசன்களில் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, லாஸ்ட்லியா, அனிதா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.