மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது! கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா! அதற்காகதான் இப்படி செய்தாரா?
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. மேலும் இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்தும் அவர் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்துகொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார். ஆனால் அண்மையில் அவர் அக்கினேனி என்பதை நீக்கிவிட்டு S என்ற எழுத்தை மட்டும் வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பினர். மேலும் நடிகை சமந்தாவின் நடவடிக்கை அவரது கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனவும், நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் கூடிய விரைவில் பிரியபோவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அவரது தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.