மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷா.. இனி அடுத்த சூப்பர் ஸ்டார் த்ரிஷா என த்ரிஷா ரசிகர்கள் ஆரவாரம்.?
தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா ராய் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
இப்படம் வசூல் ரீதியாகவும், மெர்சனால ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வந்தது. 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு திரிஷா விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'லியோ' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது திரிஷாவிற்கு. லியோ படத்திற்கு பிறகு கௌரவ நாராயணன் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
திரில்லர் கதைகளத்தை கொண்ட படமாக தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. மேலும் த்ரிஷாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் இனி அடுத்த சூப்பர் ஸ்டார் த்ரிஷா தான் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து த்ரிஷாவை கொண்டாடி வருகின்றனர்.