திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரு பக்கம் டிரஸ்ஸ காணோம்.! செம ஹாட்டாக இளசுகளை உசுப்பேத்தும் நிதி அகர்வால்!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதை தொடர்ந்து அவர் சிம்புவுடன் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி சிலையெல்லாம் வைத்தனர். அதுமட்டுமின்றி சிம்புவுக்கும், நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் கூட செய்திகள் வெளிவந்தது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்துவார். மேலும் மது, ஆணுறை விளம்பரங்களிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் தற்போது ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் உள்ள உடையணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.