திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. சூப்பர்... நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை நிஷா கணேஷ்...! அதுவும் எந்த சீரியலில் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஷா. அதனைத் தொடர்ந்து பிரபலமான அவர் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தலையணைப் பூக்கள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பின்னர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை கடந்த 2015 ஆம் ஆண்டு நிஷா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமைரா என்ற அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு நிஷா குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழில் மிகவும் ஹிட் சீரியலான செம்பருத்தி தொடரில் வக்கீலாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.