மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாகும் 2 நடிகைகள்.. யார் யார் தெரியுமா?
தெலுங்கில் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் பிரபாஸ். தற்போது இவர் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், அமிதா பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் பிரபல இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிக்க உள்ளார். பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு ராஜா டீலக்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.