குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இந்த கொடூர கொரோனாவை கொல்லணுமா? சர்ச்சை சாமியார் நித்தி கொடுத்த புது ஐடியா! என்னனு பார்த்தீர்களா!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பரவி பெரும் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டும் வருகிறது.,
இந்தநிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியாரான நித்யானந்தா கொரோனாவை விரட்டுவதற்கு யோசனைகள் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கொரோனா நமது நுரையீரலுக்குள் நுழையாமல் கேட் போட வேண்டுமா? ஆன்ம லிங்கத்தை உங்களது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, இரு கைகளால் அழுத்தி கை வைத்தியம் செய்யுங்கள். கொரோனா உங்களை நெருங்காது என கூறியுள்ளார்.
மேலும் தற்போது புதிதாக பரவிவரும் கரும்பூஞ்சை நோய்த்தொற்றை சரி செய்வதற்கு ஐடியா கூறும் வகையில், நவபாஷாணத்தின் மீது பொழியப்பட்ட பாலும், நீரும், வேம்பு ரசமும் பரவி வரும் கரும்பூஞ்சை நோய்க்கு மருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.