மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் இப்படியொரு பிரம்மாண்ட சீரியலில் நடித்துள்ளாரா? தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்கவர். ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அவரை பெருமளவில் வாழ்த்தியுள்ளனர். படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிவேதா பெத்துராஜ் முதல்முதலாக தமிழ் சீரியலில்தான் நடித்துள்ளாராம்.
அதாவது நடிகை நிவேதா மாடலிங் துறையில் இருந்த போது அவருக்கு தமிழில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த சீரியல் வெளியாகியிருந்தால் நிவேதா முதலில் சின்னத்திரையில்தான் அறிமுகமாகியிருப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் சீரியலில் நடித்த நிவேதாவின் புகைப்படம் என இணையத்தில் வைரலாகி வருகிறது.