மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்பட்டதால் அதிர்ச்சியான ரசிகர்கள்! இதான் காரணமா?
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார் நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.
முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். தற்போது ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ஒருசில புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அவர் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுத்துள்ளார்.
பொதுவாகா மீனட்சி அம்மன் கோவிலில் புகைப்படம் எடுக்கவோ, உள்ளே தொலைபேசி கொண்டு செல்வதற்கோ அனுமதி இல்லை. அப்படி இருக்க நிவேதா மட்டும் எப்படி உள்ளே தொலைபேசி கொண்டு சென்றார் என்றும் நடிகைகளுக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதனை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்களை உடனடியாக நீக்கிவிட்டார் நிவேதா பெத்துராஜ்.