மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த குட்டி குழந்தை விஜய் படத்தின் முன்னணி நடிகையா.? யார் தெரியுமா.!
திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் நிவேதா தாமஸ். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் தற்போது நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மலையாள மொழியில் வெளியான உத்தாரா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் பெற்றுள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் குருவி, ராஜாதி ராஜா, நவீன சரஸ்வதி சபதம், போராளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக 2014 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மலையாளம் மற்றும் தமிழ் மொழி சினிமாக்களில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் நிவேதா தாமஸ்.
மேலும் 2020 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை.
இவ்வாறு திரைத்துறையில் பிஸியாக நடிகையாக இருந்து வரும் நிவேதா தாமஸ் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.