மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசவத்தின் போது கைக்குழந்தையை தவறவிட்ட நர்ஸ்! கைகள் முறிந்து நேர்ந்த பரிதாபம்!
சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆரோக்கிய மேரி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் அதனை மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் குழந்தை பிறந்து ஒன்பது நாட்கள் ஆன நிலையில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையை தாய் ஆரோக்கியமேரி பார்த்துள்ளார். அப்பொழுது குழந்தையின் இருகைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. மேலும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் பயிற்சி மருத்துவர்கள் குழந்தையை கையாளும் போது தவறி கீழே போட்டுவிட்டதாகவும் அதனாலேயே குழந்தைக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தை தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
மேலும் இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் குழந்தை பிறக்கும் போதே அதிக எடையுடன் இருந்தது. அதனாலேயே வெளியே எடுக்கும்பொழுது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் போலீசார் குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.