மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதற்குத்தான் அந்த அலப்பறையா? ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பட டைட்டிலை பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் மற்றும் சமீபத்தில் வெளிவந்த தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம்வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இறுதியாக எங்களுக்குள் மகிழ்ச்சி என்று பதிவிட்டு அதனுடன் இரு ஹார்ட்டின் சிம்பலையும் பதிவிட்டிருந்தார்.
அதற்கு ப்ரியா பவானி சங்கர், லாக்டவுன் முடியும் வரை காத்திருக்க முடியாதா? நான்தான் இதனை முதலில் அனைவருக்கும் சொல்லவேண்டும் என விரும்பினேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவர்களது புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வந்தனர். மேலும் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கூறினர்.
ஆனால் இவையெல்லாம் படத்தின் ப்ரமோஷனுக்காகவே. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பெல்லி சூப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் இருவரும் நடித்துள்ளனர்.
ஓ மணபெண்ணே என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இதற்குத்தான் அந்த அலப்பறையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.