மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவாலா பாடலுக்கு வேற லெவலில் வைப் செய்த முதியவர்.. வைரல் வீடியோ.!
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
😁😁😁😁😁😁😁👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼 pic.twitter.com/f0fOu00ZaF
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 13, 2023
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா என்ற ஐட்டம் சாங் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் பார்த்த 60 வயது முதியவர் ஒருவர் காவாலா பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.