திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு இப்படியொரு ரசிகரா? அதிர்ச்சியில் கிறுகிறுத்துப்போன பிரபல நடிகர்!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். அவர் மிகவும் ஜாலியாக சுற்றி திரிகிறார். மேலும் அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.
Heavy competition guys 🤭🤭🤭 pic.twitter.com/8qc152IARb
— Sathish (@actorsathish) June 30, 2019
இந்நிலையில் பிரபல தமிழ் காமெடி நடிகர் சதிஷ் லாஸ்லியா ஆர்மி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வயதான முதியவர் ஒருவரிடம், சதிஷ், உங்கள் கிரஷ் யாரு தாத்தா, பத்மினியா? அஞ்சலி தேவியா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த தாத்தா லாஸ்லியா எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை சதீஷ் கடுமையான போட்டி மக்களே என பதிவுகளுடன் வெளியிட்டுள்ளார்.