மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.! பிரபல தமிழ் பட இயக்குனருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி! ஷாக்கான ரசிகர்கள்!!
நாடு முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டதில் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.