கொரோனாவுக்கு மேலும் ஒரு பிரபல நடிகர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!



One of famous tamil died in corona

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார்.

தமிழ் சினிமாவில் கயல் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர் நடிகர் ஃப்ளோரன்ட் சி. பெரேரா. அதனை தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். 

அதுமட்டுமின்றி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.