"பிடிக்கலைனா சொல்லிறனும்., அது பிரன்ஷிப் இல்ல" - விஷால் குறித்து கூறிய தர்ஷிகா.!!
அஜித்துடனா? அதுவும் அந்த படத்திலா? தேடிவந்த வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு, தற்போது புலம்பி கொட்டும் பிரபல நடிகை!!
பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில்தமிழில் ரீமேக் செய்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய சமூக நீதிகருத்து கொண்ட படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இவ்வாறு மாபெரும் ஹிட் அடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டெல்லாவைதான் கேட்டுள்ளனர். ஆனால், பிங்க் படத்தில் அமிதாப் பச்சனின் மனைவியாக வந்த கதாபாத்திரத்திற்கு ஏன்டா முக்கியத்துவமும் இல்லாததை அறிந்த அவர் நடிக்க மறுத்துள்ளாராம்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பை கண்ட அவர் தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். அஜித் போன்ற மாஸ் நடிகருடன் நடித்திருந்தால் தமிழில் ஒரு நல்ல என்ட்ரியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படி செய்து விட்டேனே என வருத்தம் அடைந்துள்ளாராம்.