#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி விஜய் கட்டிபிடித்ததையும், சிரிப்பையும் என்னால் மறக்க முடியாது - பிரபல நடிகர் ஓபன் டாக்!
விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்துவரும் படம் பிகில். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் விளையாட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு,சவுந்தரராஜா, இந்துஜா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய ஷூட்டிங் அனுபவத்தை பற்றி நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளார். மேலும் ‘இப்படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட 30 நாட்கள் அவருடன் நடித்துள்ளேன். அவரது எளிமையை சொல்ல வார்த்தைகளே இல்லை. குறிப்பாக அவர் என்னை கட்டிபிடித்ததையும், சிரிப்பையும் என்னால் மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய நன்றி’ என்று கூறியுள்ளார்.