திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி ரசிகர்களை படம் பார்க்க உள்ளே அனுமதிக்காததால் திரையரங்கில் பரபரப்பு.? ரசிகர்கள் கொந்தளிப்பு.!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது ஏ ஆர் ஆர் எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம். இங்கு ஒரு ஸ்கிரீனில் ரஜினி நடித்த "ஜெயிலர்" திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இத்திரையரங்கில் ஆன்லைனிலும் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்ராஜ் என்பவர், தனது 25ஆவது திருமண நாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தைப் பார்ப்பதற்காக, ஏ ஆர் ஆர் எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, நேற்று படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்தவர்களை, உள்ளே அனுமதிக்காமல் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். அதன் பிறகு, வெறும் 9 பேர் மட்டுமே திரைப்படத்திற்கு வந்துள்ளதால், படத்தை தற்போது திரையிட முடியாது என்றும் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், டிக்கெட் தொகை ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்று கூறி திரையரங்க உரிமையாளர் ரசிகர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.