திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீசை வச்ச குழந்தையப்பா.. படையப்பா படத்தில் வரும் கியூட் குழந்தை இந்த சீரியல் ஹீரோயினா.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
1999 ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய படம்தான் படையப்பா. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.
கே. எஸ் ரவிக்குமார் இயக்கிய படங்களில் படையப்பா ஒரு முக்கிய படைப்பாக இன்றுவரை பார்க்க முடிகிறது. இப்படத்தில் வரும் என் பேரு படையப்பா என்ற பாடல் மிக அதிகளவு ரசிகர்களால் கவரப்பட்டு அந்த காலகட்டத்தில் ஹிட் பாடலாக வலம் வந்தது. இப்பாடலில் பாசம் உள்ள மனிதனப்பா, மீசை வச்ச குழந்தையப்பா என்ற வரிகளின் போது ரஜினியின் முகம் குழந்தை முகமாக மாறும்.
அந்த குழந்தை வேறு யாருமல்ல. சீரியல் நடிகை ஹேமா பிந்து. அவர் இதயத்தை திருடாதே மற்றும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் இலக்கியா உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.