#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹனிமூன் போன கோபிக்கு காத்திருந்த ஷாக்!! பரிதாபமாக இப்படி சிக்கி தவிக்குறாரே.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிடுவார். கணவரின் துரோகம் தெரிந்து பாக்கியலட்சுமி அவரை விவாகரத்து செய்கிறார்.வீட்டை விட்டும் வெளியேற்றுகிறார்.
கிடைத்தது வாய்ப்பு என கோபியும் குடும்பத்தை எதிர்த்து ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் கோபி கதாபாத்திரத்தை மோசமாகத் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ராதிகா, கோபியுடன் ஹனிமூன் செல்கிறார். அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் இணைந்து வந்துள்ளனர். இந்நிலையில் கோபியை கண்ட பாண்டியன் ஸ்டோர் கண்ணன் அவரது ரூமிற்கு சென்று அட்டகாசம் செய்கிறார். அப்பொழுது ரூமில் ராதிகாவை கண்ட அவர் கோபி திருமணம் செய்துகொண்டது தெரியாமல், அக்காவிற்கு துரோகம் செய்கிறீர்களா?? இதை வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறேன் என ஆவேசமாக செல்கிறார். இதனால் கோபி தவித்துப் போயுள்ளார்.