மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சிடுமூஞ்சியாக நடிக்கும் இவருக்கு இவ்வளவு பெரிய மனசா! அம்மாவை இழந்த நடிகருக்காக அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்துகொண்டு மனைவியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவரையே குறைகூறிதிட்டிக் கொண்டே இருக்கும் சிடுமூஞ்சி கணவர் கதாபாத்திரத்தில் கோபியாக நடித்து வருபவர் சதீஷ்.
இந்த கதாப்பாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு கடும்கோபம் உள்ளது. இந்நிலையில் அண்மையில் கூட ரசிகர்கள் திட்டுவதற்கு அவர், நான் என்ன செய்வது? சம்பளம் கொடுக்குறாங்க நான் நடிக்கிறேன் என கூறி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாக் பேக் கதையில் வரவுள்ள ஒரு குட்டி பையனின் புகைப்படத்தை வெளியிட்டு அவன் இரண்டு வருடத்திற்கு முன் தனது அம்மாவை இழந்துவிட்டான். அதை கேட்டதும் எனது இதயம் உடைந்துவிட்டது. நான் என்னை உன் அம்மா, அப்பா என நினைத்துக்கொள் என கூறினேன். எனக்கு அந்தப் பையனுடைய வலி நன்றாக புரியும். ஏனெனில் 5 வயதிலேயே நான் எனது பெற்றோரை இழந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் அவரது நல்ல மனசை பாராட்டி வருகின்றனர்.