பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்த பிரபல நடிகரின் நிஜ அம்மாவா! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!



pandian store actress sheela is mother of actor vikranth

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடரில் கடந்த வாரம் முழுவதும் உணர்வுபூர்வமான, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

 அதாவது பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மாவாக நடித்து வந்தவர் உயிரிழந்தது போலவும், அவருக்கு அனைத்து இறுதி சடங்குகளும் நடப்பது போன்றும் எபிசோடுகள் ஒளிபரப்பானது. இத்தொடர் ரசிகர்கள் அனைவராலும் தவறாமல் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

pandian store actress

 பாண்டியன் ஸ்டோர் தொடரில் அம்மா லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வேறு யாருமல்ல. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் விக்ராந்தின் தாயார் ஆவார். மேலும் தளபதி விஜய்யின் சித்தி ஆவார். மிகவும் சிறப்பாக இத்தகைய ஹிட் தொடரில் நடித்து வந்த அவர் திடீரென பாதியிலேயே விலகும்படி அமைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.