மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது! சும்மா செதுக்கி வச்ச சிலையாட்டம் ஜொலிக்கிறாரே! சொக்கிபோன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் போன்றவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்த காவியா நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் காவியா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போதும் ராணி போல உடையணிந்து சும்மா செதுக்கி வைத்த சிலை போல அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதை இணையத்தில் வெளியிட்ட நிலையில் பெருமளவில் வைரலாகி வருகிறது.