மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் திருமண மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..! பெற்றோர் ஆசையை நிறைவேற்ற திடீர் முடிவு! வைரல் வீடியோ!
சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நல்ல டான்சர் இப்படி பல்வேறு திறமைகளை கொண்டவர் சித்ரா. மக்கள் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் சன் டீவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், விஜய் டிவி, வேந்தர் டிவி என அணைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பெரிய பாப்பாவாக வந்த இவர், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாரத்தில் நடித்துவருகிறார். மக்கள் மத்தியில் முல்லையின் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இவர் மணமகள் போல் உடை அணிந்து, திருமண மேடையில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இவருக்குத்தான் திருமணம் முடிந்துவிட்டது என ரசிகர்கள் கருத்து கூற தொடங்கிவிட்டனர்.
இதுகுறித்து விசாரித்ததில், தனது தாய், தந்தையின் 60 ஆம் ஆண்டு திருமண விழாவை மிக சிறப்பாக நடத்தியுள்ளாராம் முல்லை. அதில் தனது தாய் - தந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகிவருகிறது.