திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2-வது காதலில் சிக்கி சின்னாபின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.! உணர்ச்சி குவியலாய் வெளியிட்ட பதிவு.!
பிரபல யூட்யூபர் மற்றும் செய்தி வாசிப்பாளரான பனிமலர் பன்னீர்செல்வம் தனது அந்தரங்க வாழ்க்கை குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பள்ளி பருவத்தில் காதல் வருவது இயல்பு. ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கை ரேஸில் அது மறந்து போய்விடும்.
நான் எனது ஊரை விட்டு சென்னைக்கு வேலைக்கு வந்து சேர்ந்த போது என்னுடன் பயணித்த நீண்ட நாள் நண்பரை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டேன். ஆனால், அந்த உறவு முடிந்து போனது. காதலித்தவருடன் தான் எனக்கு பிரச்சனை. காதலில் எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டாவது முறையும் எனக்கு காதல் ஏற்பட்டது.
ஐந்து ஆண்டுகளில் அந்த காதல் எனக்கு நிறைய காயங்களையும், வலியையும் கொடுத்தது. இதனால், வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டேன். மன அழுத்தம் உடல் நலத்தையும் பாதித்தது. மனநல ஆலோசகரை சந்தித்து உடற்பயிற்சி, மனப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து மீண்டும் புதிதாக பிறந்தேன்.
காதலிப்பது தவறு இல்லை. ஆனால், இவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் வருவார்கள் என்று ஒருவரை 100% நம்புவது தான் தவறு. காதலை 99% நம்பலாம். ஒரு சதவீதம் வாழ்க்கையில் என்ன வேணாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவில்லை என்றால் நாம் நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
எனது முன்னாள் காதலருடன் இப்போதும் நட்பு ரீதியாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு குழந்தை, குடும்பம் என்று ஆன பின்னும் கூட அவருடன் நட்பு பாராட்ட முடிகிறது. உணர்வுகளை மதிப்பது தானே உண்மையான காதல்.?" என்று அவர் தெரிவித்துள்ளார்.