3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
இயக்கம், தயாரிப்பு இரண்டிலும் கலக்கும் பா.ரஞ்சித் ஆச்சரியபடுத்தும் வெற்றிக்கான ரகசியம்!!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படங்களான அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி காலா போன்ற படங்கள் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படங்களாக அமைந்தது. தற்போது இவரது தயாரிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பரியேறும் பெருமாள்.
இந்த நிலையில் பா.ரஞ்சித் அவர்கள் இயக்கம், தயாரிப்பு என இரண்டு துறைகளிலுமே ஒரே கோணத்தில் பயணித்து சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு படங்களை கொடுத்து வருகிறார் என்று ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், சைமா விருது, எடிசன் விருது போன்ற விருதுகளை இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களான மெட்ராஸ் மற்றும் கபாலி ஆகிய படங்கள் பெற்று தந்து இயக்குனர் ரஞ்சித்துக்கு பெருமையை தேடித் தந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் அதே சமயத்தில் நல்ல வசூலையும் பெற்றது.
இதில் மெட்ராஸ் படம் இன்றைய சூழலில் ஒவ்வொரு ஏரியாவிலும் நடக்கும் பிரச்சினையானா பொது சுவற்றில் இடம்பிடிக்க அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் மட்டத்தில் உள்ள தலைவர்களின் அராஜக போக்கை மக்களுக்கு காட்டும் விதமாக அமைந்தது. இதே பாணியில் வெளிவந்த படம் தான் காலா ஒரு சமூக பிரச்சினையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் கேரக்டராக அமைந்திருந்தது.
இன்னும் சொல்லப்போனால் திரையுலக பிரபலங்களும் அனைத்து ரசிகர் தரப்பினராலும் நல்ல விமர்சனங்களை பெற்று தற்சமயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள் படமும் இன்றைய சமூகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான்.
சினிமாவில் மட்டுமல்ல சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டு துறைகளிலுமே சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து தான் படங்களை உருவாக்கி வருகிறார் என்பது ரசிகர்கள் பலரும் அறியாத உண்மை என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலான ஒரு கருத்து நிலவி வருகிறது.