சரியான கிறுக்கனா இருக்கீங்க.. சேரனின் பதிவிற்கு தனது ஸ்டைலில் பார்த்திபன் கொடுத்த பதிலடியை பார்த்தீர்களா!!
பிரபல முன்னணி நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தயாரித்து இயக்கியதோடு அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல திரைபிரபலங்களும் இப்படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
ஒத்த செருப்பு படம் வெளியானபோது இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதனால் அவரால் அப்படத்தைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை கண்ட சேரன் பார்த்திபனுக்கு வஞ்சப் புகழ்ச்சியில் வாழ்த்துக்கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “நீங்கள் ஒற்றை ஆளாய் கிறுக்கிய கவிதை, நீங்கள் இன்னும் சினிமா கிறுக்கனாக இருக்கிறீர்கள் என்பதை பறைசாற்றுகிறது. இந்த பித்தம் தெளிய உங்களுக்கு கீழ்கண்ட மருந்துகள் தேவை. 1. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, 2. சிறந்த நடிகருக்கான தேசிய விருது , 3. காந்தி படம் போட்ட கரண்சி – 1000 மூட்டைகள். இதெல்லாம் இவருக்கு கொடுத்தால் அவரது நோய் பலமடங்காகி இன்னும் அதிகமாக கிறுக்கல்கள் வரும் என புகழ்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டுக்கு பார்த்திபன் உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது! நன்றி! என பதிவிட்டுள்ளார்.
உள்ளங்கையால் மறைத்த
— R.Parthiban (@rparthiepan) October 10, 2019
உதய சூரியன் நீங்கள்.
ஊர் ஒதுக்கித் தள்ள,
உந்தி முந்தி எப்படியாவது
வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது!
நன்றி! https://t.co/bibeZohQGt