திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கமல் பிறந்தநாள் விழாவில் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கல" பார்த்திபனின் வைரல் பதிவு.!
குழந்தை நட்சத்திரமாக தனது 5 வயதில் அறிமுகமாகி, இன்று உலகநாயகனாக உயர்ந்து நிற்பவர் கமலஹாசன். இவர் தனது 69ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடினர். இவருக்கு ரசிகர்களும், அனைத்து திரையுலகப் பிரபலங்களும் நேற்றிலிருந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், கமல் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைத்தார். மேலும் ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்து நெருக்கமானவர்களுடன் கொண்டாடியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான், நடிகர் பார்த்திபனை சந்தித்து பேசியது குறித்து, பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " இந்திய திரையுலகில் தனது படங்கள் மூலம் மிக உயர்வாக மதிக்கப்படும் நடிகர் அமீர்கான்.
நேற்று கமல் சாரின் பிறந்தநாளில் ஒருபுறமாக நின்றிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அணைத்துக் கொண்டு, என்னை விசாரித்து, அவரது தாயாருக்கு உடல்நலமில்லை என்று கூறி, அடுத்த படமென்ன என்று கேட்டு, பின்னர் திரும்பி செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்" என்று குறிப்பிட்டுள்ளார்.